இந்திய இறையாண்மைக்கு ஆபத்து : ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

0
229

ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் காண்பதற்காக அம்பேத்கரால் உருவாக்கப்பட்டதே இட ஒதுக்கீடு கொள்கை. ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிந்து பட்டியலின மக்களின் சலுகைகளை இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்க நினைப்பது ஹிந்து தலித் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை அளிப்பது மதமாற்றத்தை மேலும் அதிகப்படுத்தும். ஒரு காலகட்டத்தில், இது இந்திய இறையாண்மைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்யும் கட்சிகள் உணர வேண்டும். ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here