ஹைதராபாதில், ஹுசைன் சாகர் ஏரிக்கரையோரம், 50 அடி உயர பீடத்தில், 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. 11.4 ஏக்கரில், 146 கோடி ரூபாய் செலவில், 360 டன் ஸ்டீல், 114 டன் வெண்கலத்துடன் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ள பீடம், பார்லி., கட்டடம் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று, அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை ஒட்டி, இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை, தெலுங்கானா முதல்வர் திறந்து வைத்தார்., நம் நாட்டில் உள்ள அம்பேத்கர் சிலைகளில், மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது.