மனிதர்களின் உடலில் உள்ள ரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் வயதை மதிப்பிடவும், இதய நோய்களுக்கான ஆரம்ப கட்ட பரிசோதனையை மேற்கொள்ளவும், மின்னணுசாதனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனம் குறித்து, 5,000க்கும் மேற்பட்ட நபர்களிடம், விரிவான கள சோதனை செய்யப்பட்டு, வணிக ரீதியானபயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. இந்த தொழில்நுட்பம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில், ஐந்து பயன்பாட்டு காப்புரிமைகளையும் பெற்றுள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது. ‘ஆர்ட்சென்ஸ்’ எனப்படும் இந்த சாதனத்தால் கண்டறியப்படும் ஆய்வுகளின் வாயிலாக, எதிர்காலத்தில் ஏற்படும் இதய நோய்களுக்கான முன்னெச்சரிக்கை மதிப்பீடுகளை பெறலாம்.