தமிழகத்தில் இந்திய கடற்படை வீரர்கள் நீச்சல் பயிற்சி

0
112

இந்திய கடற்படைக்கு தேர்வான புதிய வீரர்களுக்கு ராமேஸ்வரம், பாம்பனில் உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நீச்சல் பயிற்சி அளிப்பது வழக்கம். அதன்படி நேற்று இந்திய கடற்படை ரோந்து படகில் ஏராளமான வீரர்கள் பாம்பன் கடல் பகுதிக்கு வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து புறப்பட்ட 3 ஹெலிகாப்டர்கள் பாம்பன் கடல் பகுதிக்கு வந்தன. அங்கு படகில் தயாராக இருந்த வீரர்கள் கயறு மூலம் ஹெலிகாப்டரில் ஏறினர்.பின், ஹெலிகாப்டரில் இருந்து கயறு மூலம் கடலில் குதித்து நீச்சல் பயிற்சி பெற்றனர். இது புதிய வீரர்களுக்கு அளிக்கப்படும் வழக்கமான நீச்சல் பயிற்சி தான், என கடற்படையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here