ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக கவர்னர் ரவி நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயம் உத்தமமான தொழில். ஒரு காலத்தில இந்தியா உணவு உற்பத்தியில் சிறந்து விளங்கியது. ஆங்கிலேயர்கள் வருகையால் பணப்பயிர்கள் அதிகம் பயிரிடப்பட்டது. 1000 ஆண்டுகளாக விவசாயத்தை பாரம்பரியமாக பாதுகாத்து இன்றைக்கு உலகத்திற்கே உணவு வழங்கும் அளவில் இந்தியா விவசாயத்தில் உயர்ந்துள்ளது. இடம், மண் சார்ந்து விவசாயம் இருக்க வேண்டும்.நம்மிடம் விவசாயத்திற்க்கான அனைத்து வசதிகளும் உள்ளன இயற்கை விவசாய முறைகளை பின்பற்ற வேண்டும். குறைந்த தண்ணீரில் அதிக லாபம் தரும் சிறுதானியங்கள் உற்பத்தியில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். விவசாயம் தெரிந்தவர். அதனால் தான் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.என்று பேசினார்.