தமிழகத்தில் கிருஸ்துவ பாதிரிகளால் தொடரும் பாலியல் வன்கொடுமை

0
107

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜா, 49, இவர் அப்பகுதியில் சர்ச் நடத்தி, பாதிரியாராக இருந்தார். கடந்த 2022 இரவில் சர்ச்சில் பிரார்த்தனை நடந்த போது அதே பகுதி பெண், தன் மனநலம் குன்றிய 17 வயது சிறுமியுடன் பங்கேற்றார். சர்ச்சில் இருந்து தாய் வெளியே சென்ற நிலையில், தனியாக இருந்த சிறுமிக்கு பாதிரியார் ஜோசப் ராஜா பாலியல் தொல்லை கொடுத்தார். ராஜபாளையம் மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெண்கள் அமைப்பின் போராட்டத்தின் காரணமாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பாதிரியார், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிரியார் ஜோசப் ராஜாவிற்கு வாழ்நாள் சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here