ஆதி சங்கரர். 32 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார். 8 வயதில் வேதமும், 12 வயதில் சாஸ்திரமும், 16 வயதில் பாஷ்யமும் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். சங்கரர் சனதான தர்மத்தை, அத்வைதம், வேதத்தை நமக்கு போதித்தார். பக்திதான் பட்டிதொட்டி எங்கும் ஊடுருவி, ஆன்மிகத்தை அணு அணுவாகப் பரப்பி, தேசத்தையே செழிப்பாக்கி இருக்கிறது. ஆதி சங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், ஸ்ரீமத்வர் போன்ற மகான்கள் பல்வேறு காலகட்டங்களில் அவதரித்து, பக்தி தழைத்தோங்க வலுவான உரமிட்டார்கள்; விருட்சமாக வளர்த்தார்கள். ஆன்மிகத்தை, அடித்தட்டில் இருக்கிற பாமரனிடமும் கொண்டு போய்ச் சேர்க்க மடங்களும், ஆதீனங்களும் பெரிதும் பாடுபடுகின்றன. அவற்றுள் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட காஞ்சி காமகோடி பீடமும் குறிப்பிடத்தக்க ஒன்று.
ஆதி சங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம், காலடி, பசுபதிநாத் மந்திர், காத்மாண்டு, நேபால், வாரணாசி, உத்தரபிரதேசம், குவஹாத்தி, அசாம்- பாலாஜி மந்திர், மா காமாக்யா, ஷங்கர்தேவ் நேத்ராலயா, காஞ்சனேஷ்வர் மகாதேவ் மந்திர், ராணிபூல், சிக்கிம் சங்கர் மடம், பூரி, ஒடிசா, புது தில்லி, அமிர்தசரஸ், பஞ்சாப், சண்டிகர், கோவா, புனே, மகாராஷ்டிரா, காஷ்மீர், கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீமடங்களில் ஆதிசங்கரருக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் தீபாராதனை, ஆதி சங்கரர் அவதார கட்ட பாராயணம், மகாபிஷேகம், ரிக் சம்ஹிதா ஹோமம், ரிக் வேதம், யஜுர் வேத க்ரம பாராயணம் ஆகியவை நடைபெற்றது.