பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மனதின் குரல் 100வது நிகழ்ச்சி, வரும் 30ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளது. அன்றைய தின நிகழ்ச்சியை, தமிழக கவர்னர் மாளிகையில், பெரிய திரையில் பிரதமர் உரையை காண, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுாறாவது நிகழ்ச்சியில், பிரதமர் நேரலையில் பேச உள்ளார். கவர்னர் மாளிகையில், பிரதமர் உரையை கேட்க, முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை, கவர்னர் மாளிகை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.