தமிழகத்தில் அரிய வகை பறவை “அனுமன் உப்புக்கொத்தி” கண்டுபிடிப்பு

0
257

 

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரை பகுதியின் புதிய பறவை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ‘அனுமன் உப்புக்கொத்தி’ பறவை ராமநாதபுரம், கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது

மதுரை பறவை ஆய்வாளர்கள் ரவீந்திரன், பைஜு, ரவிச்சந்திரன் கூறியது: ‘இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை’ மூலம் வனத்துறையுடன் இணைந்து பறவைகளை ஆய்வு செய்கிறோம். சர்வதேச மதிப்பாய்வு இதழான ‘ஜர்னல் ஆப் திரட்டன்ட் டாக்ஸா’ ‘அனுமன் உப்புக்கொத்தி’யை இந்திய தென்கிழக்கு கடற்கரை பகுதியின் புதிய பறவையாக அறிவித்துள்ளது.இப்பறவை முன்பு ‘கென்டிஷ் உப்புக்கொத்தி’ யின் கிளை இனமாக கருதப்பட்டது. தொடர் மறு ஆய்வு செய்து, 86 ஆண்டுகளுக்கு பின் தனி இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கிழக்கு கடற்கரை ஓரம் இதன் இனப்பெருக்க தளங்களை கண்டறிந்துள்ளோம். இது தென்னிந்தியா, இலங்கையில் மட்டும் இனப்பெருக்கம் செய்கிறது.கடற்கரையோர கழிமுகம், ஈர நிலம், உப்பள பகுதியில் குழி பறித்து 3 முட்டைகள் வரை இடும். முட்டைகளை ஆண், பெண் பறவைகள் அடைகாக்கும். 4 வாரங்களில் குஞ்சுகள் பொறிக்கும். தாய், தந்தை பறவைகளுடன் இரை தேடி உண்ணும். ஒரு மாதத்தில் சிறகுகள் முளைத்து பறக்கும்.இவை இனப்பெருக்கம் செய்யும் பகுதிகள் ஆக்கிரமிப்பு, வளர்ச்சி திட்டத்தால் அழிகிறது. விலங்குகள் பல முட்டைகள், குஞ்சுகளை வேட்டையாடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here