துாய்மை பணியாளர்கள் மீட்ட நடராஜர் சிலை

0
1581

சென்னை வேப்பேரி அருகே, சூளை ஜெனரல் காலின் சாலையில் உள்ள, தனியார் கல்லுாரி அருகே, நேற்று மாலை, 3:00 மணியளவில், துாய்மை பணியாளர்கள் பரமேஸ்வரி, கவுரி ஆகியோர் அந்த இடத்தில் உள்ள, கோணி பையை பார்த்தனர். அதில், 3 அடி உயர நடராஜர் சிலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து துப்புரவு ஆய்வாளர் தேவதாசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சிலையை மீட்டு, அதன் தொன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ‘பஞ்சலோக சிலை மாதிரி தெரியவில்லை. முழுமையான ஆய்வுக்கு பின், சிலை எந்த பொருளில் செய்யப்பட்டது என்பது குறித்து தெரியவரும்’ என்கின்றனர் போலீசார்.

“சென்னை-”தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, 900க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம், ” என, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ் கூறினார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here