உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளி அதிகாரபூர்வ அறிவிப்பு

0
113

உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019ம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ், 66, பதவி காலம் 2024ம் ஆண்டு நிறைவடைகிறது. இருப்பினும் முன்கூட்டியே பதவி விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசித்தார். அதில், சர்வதேச நிதி நிறுவனமான ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.,வும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா, உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.

இதுவரை தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எனவே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அஜெய் பங்கா ஐந்து ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here