புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கிராமத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 1ம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி, இரவு வீடு திரும்பாததால், சிறுமியின் தாய், மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம் பெங்களூரில் சிறுமியை மீட்டு, அவருடன் இருந்த மூன்று பேரையும் பிடித்து, மணப்பாறை அழைத்து வந்தனர். விசாரணையில், வேலுாரைச் சேர்ந்த முபாரக் அலி, 32, சிறுமியுடன் மொபைல் போனில் பேசி, பழகி உள்ளார். கடந்த 1ம் தேதி, மணப்பாறை வந்த அவர், சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, திருமணம் செய்து கொள்வதாக பெங்களூரு அழைத்துச் சென்றார். அங்கு, சிறுமியை பலாத்காரம் செய்த அவர், வேலுாரைச் சேர்ந்த ரியாஸ், 32, சதாம் உசேன், 28 ஆகியோரை வரவழைத்து, அவர்களுக்கும் சிறுமியை விருந்தாக்கினார். ரியாஸ், சதாம் உசேன், முபாரக் அலி ஆகியோரை, ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்த போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். “தி கேரளா ஸ்டோரி” படம் வெளியாகி, படம் வெளியான தியேட்டர் வாசல்கள் எல்லாம் போராட்டக் களங்களாக இருக்கும் நிலையில் மணப்பாறையில் மதமாற்ற நிர்பந்தம் தொடர்பான எந்த செக்சனையும் போடாமல் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை.