இந்திய பயணத்தை பாதியில் முடிக்கும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இல் கோஹன்

0
1148

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இலி கோஹன், அவசரமாக நாடு திரும்புகிறார். மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மிக நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. காசா மலைக்குன்று பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் குழுவை குறிவைத்து, இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்றும் இந்த தாக்குதல் தொடர்ந்தது. இந்நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இல் கோஹன், மூன்று நாட்கள் பயணமாக நேற்று புதுடில்லி வந்தார். நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.இஸ்ரேலில் பாதுகாப்பு பிரச்னை ஏற்பட்டுள்ளதால், அவர் தன் பயணத்தை பாதியில் முடித்து நாடு திரும்ப உள்ளதாக, புதுடில்லியில் உள்ள இஸ்ரேல் துாதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின், அவர் நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here