1. சிவகங்கையில் மே 11, 1897ஆம் ஆண்டு பிறந்தார்.
2. எட்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலும் ஆன்மிக விழிப்புணர்வும் இவருக்கு ஏற்பட்டது. இமய மலையில் வாழ்ந்துவந்த சித்தர் ஒருவர் இவருக்கு ‘சுத்தானந்தம்’ என்று பெயரிட்டு தீட்சை வழங்கினார்.
3. இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் மிகவும் பிரசித்தம். பல மொழிகளைக் கற்றறிந்தவர். திருக்குறளை ஆங்கிலத்தில் அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் மொழிபெயர்த்தார்.
4. தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.
5. கிராமப் பணி, கதர்ப்பணி, மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மறுவாழ்வு ஆகிய சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். அரவிந்தரின் தொடர்பால் இவரது வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
6. புதுவை ஆசிரமத்தில் 20 ஆண்டுகள் மவுன விரதம் இருந்தார்.
7. சிறந்த மொழிபெயர்ப்பாளர். கவிதைகள், உரைநடை, பயணநூல், இலக்கணம், கீர்த்தனைகள், நாடகம், திறனாய்வு, சிறுகதை, அறிவியல், வாழ்க்கை வரலாறு ஆகிய பல துறைகளிலும் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார்.
8. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் ராஜராஜன் விருது இவரது ‘பாரத சக்தி’ நூலுக்குக் கிடைத்தது.
9. ‘அகவாழ்வு சிறந்திட யோகம்; புறவாழ்வு சிறந்திட அறிவியல் இவை இரண்டும் இணைந்தால், மனித வாழ்வு அமரத்துவம் பெறும்; மண்ணில் விண்ணரசு தோன்றும்’ என்பதுதான் இவர் உலகுக்கு அளித்த செய்தி. 1977-ல் சிவகங்கையில் ‘சுத்தானந்த யோக சமாஜம் என்னும் அமைப்பை இவர் நிறுவினார்.
10. 1979-ல் சுத்தானந்த தேசிய வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியை நிறுவினார். அங்கேயே ஒரு குடிலை அமைத்து, பள்ளியின் வளர்ச்சிக்கு வழிகாட்டிவந்தார். தன் படைப்புகளுக்கு வந்த அத்தனை தொகையையும் சமாஜப் பணிகளுக்கே செலவிட்டார்.
#shuddhanandabharati #சான்றோர்தினம்