அழிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்ட வேண்டும்

0
243

மணிப்பூரில் உள்ள மெய்தே சமாஜ் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது குக்கி தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதல்களுக்கு வி.ஹெச்.பி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த மோதலின் போது எரிக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட மணிப்பூர் மலைகளில் உள்ள மெய்தே சமாஜத்தின் பிரமாண்ட கோயில்களின் மாவட்ட வாரியான பட்டியலை வெளியிட்டு பேசிய வி.ஹெச்.பி பொதுச்செயலாளர் மிலிந்த் பராண்டே, இந்த கோயில்களை மீண்டும் கட்டப்பட வேண்டும். அப்பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததுடன் இந்த தாக்குதலில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மட்டுமே தாக்கப்பட்டதாக தவறான கதைகளை பரப்புவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் ஏற்கனவே சேவை செய்து வருகிறோம், இப்போது இக்கோயில்களை மீண்டும் சீரமைக்க ஹிந்து சமுதாயம் முன்வர வேண்டும். இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான மோதல்களின் போது பல அரசு சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது என்று மிலிந்த் பராண்டே தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் தேச விரோத மற்றும் சமூக விரோத சக்திகளை கட்டுப்படுத்த வேண்டும். பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகள் மற்றும் அமைப்புகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வி.ஹெச்.பி வேண்டுகோள் விடுத்துள்ளது. அழிக்கப்பட்ட 11 பெரிய கோயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டது, இதில் தெங்கௌபால் மற்றும் மோரேச் ஆகிய 4 கோயில்களும், திபைமுக் சர்ச்சன்பூரின் 3 கோயில்களும், சிங்கோய் சிங் இம்பாலின் 4 கோயில்களும் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here