கோயிலுக்குள் நுழைய முஸ்லிம்கள் முயற்சி

0
184

மகாராஷ்டிர மாநிலத்தில், உரூஸ் ஊர்வலத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் குழு ஒன்று மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஜோதிர்லிங்க ஸ்தலமான திரியம்பகேஷ்வரர் கோயில் வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, புனித சிவலிங்கத்தின் மீது சதர் துணியை வைக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும், உஷாராக இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் கோயில் அதிகாரிகளால் இந்த நுழைவு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த விவராரத்தில் காவல்துறையின் முழுமையான விசாரணை தேவை என பிராமண மகாசபை கோரியுள்ளது. மேலும், உரிய காலக்கெடுவுக்குள் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட முஸ்லிம் குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்ரீ திரிம்பகேஷ்வர் தேவஸ்தான அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி, மே 13 அன்று இரவு 9:41 மணியளவில் நடந்த ஒரு சம்பவத்தை விவரித்து, திரிம்பகேஷ்வர் காவல் ஆய்வாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஸ்ரீ திரியம்பகேஷ்வர் கோயிலின் வடக்கு வாயில் அருகே உருஸ் ஊர்வலத்தின் போது, ​​உரூஸைச் சேர்ந்த குறிப்பிட்ட மத பங்கேற்பாளர்கள் கோயில் வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். இருப்பினும், மகாராஷ்டிர காவல்துறையின் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாகத் தலையிட்டு முஸ்லிம்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். ஹிந்துக்கள் மட்டுமே கோயிலில் நுழைய அனுமதிக்கும் நீண்டகால பாரம்பரியம் உள்ளது. இச்சம்பவம் சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. தேவஸ்தான அறக்கட்டளை உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி சார்பாக இந்த சம்பவத்தில் விசாரணையைத் தொடங்குமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம். மேலும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here