ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை தடுக்கும் முயற்சி

0
79

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தவில்லை என்பதால், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்ததுடன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திறந்தவெளியில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, அணிவகுப்பு ஊர்வலத்திற்கு மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். காவல்துறை அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி, அணிவகுப்பு ஊர்வலம் நடத்த பிப்ரவரி 12, 19, மார்ச் 5 ஆகிய தேதிகளை தேர்வு செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர், தமிழக டி.ஜி.பி மற்றும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்தனர். ஆனால், அவற்றில் முதல் இரண்டு தேதிகள் முடிந்துவிட்ட நிலையில், மார்ச் 5ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க கோரி காவல்துறைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதி கோரி அளித்த விண்ணப்பித்தை ஏற்று, மார்ச் 5ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதியளிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உளவுத்துறை சார்பாக கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில் தமிழக காவல்துறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுத்ததாகவும், அதனை கண்டுகொள்ளாமல் அரசின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் வந்துள்ளது எனவும் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here