#சிரிக்கும்புத்தர் #operationsmilingbuddha
சிரிக்கும் புத்தர் (Smiling Buddha) என்பது இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனையை குறிக்கிறது. 18 May 1974
ஆன்மிகம் செழித்து வளர்ந்த இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தி, அணுகுண்டை வெடித்துக் காட்டும் கட்டாயத்தைக் காலம் ஏற்படுத்தியது.
இந்திய அணுசக்தித் துறைக்கு விக்ரம்சாராபாய் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் நடந்த, புளுட்டோனியம் சேகரிப்பு 1969-ம் ஆண்டு நிறைவு பெற்றது.
இதையடுத்து, அணுகுண்டு தயாரிக்கும் பொறுப்பு விஞ்ஞானி ராஜா ராமண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இக்குழுவில் டாக்டர் அப்துல் கலாம் உட்பட மொத்தமாக 75 அறிவியலாளர்களும், பொறியியல் வல்லுனர்களும் செயல்பட்டனர்.
பிரதமர் இந்திராகாந்தியின் உத்தரவுப்படி, உலகிற்கு அகிம்சையைப் போதித்த புத்தரின் பிறந்தநாளான பூத்தபூர்ணிமா அன்று, காலை 8 மணி ஐந்தாவது நிமிடத்தில், ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான பொக்ரான் சோதனைக் கிராமத்தில் 107 மீட்டர் ஆழத்தில் நடைபெற்ற அந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
வெற்றிச் செய்தியை பிரதமர் இந்திராகாந்திக்குத் தெரிவித்த விஞ்ஞானிகள், புத்தர் சிரித்துவிட்டார் என சங்கேத மொழியில் அதைத் தெரிவித்தனர்.
வல்லரசு நாடுகள் கோபமடைந்தன. ஆனால், அனைத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார் பிரதமர் இந்திரகாந்தி.
இந்தியா அணுகுண்டுகள் தயாரித்தது, எந்த நாட்டிற்கு எதிராகவும் அதைப் பயன்படுத்துவதற்கு இல்லை. மாறாக, தனது வலிமையை உலகிற்குக் காட்டவும், இந்தியாவை அச்சுறுத்த நினைக்கும் நாடுகளை எச்சரிக்கவுமே அணுகுண்டுகளைத் தயாரித்தது என்று சொல்லி இந்தியாவின் பெருமையை உலகிற்கு பிரகடனம் செய்தார்.
#சான்றோர்தினம்