மூழ்கிய ‘லு பெங் யுவான் யு 028’ கப்பலை மீட்க சீனாவுக்கு உதவும் இந்தியா

0
223

 

இந்திய பெருங்கடல் பகுதியில் 39 பேருடன் கடலில் மூழ்கிய சீன மீன்பிடிக் கப்பலை மீட்கும் பணியில், நம் கடற்படைக்கு சொந்தமான, ‘பி81’ ரோந்து விமானம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்திய பெருங்கடலின் தென் பகுதியில், சீனாவுக்கு சொந்தமான, ‘லு பெங் யுவான் யு 028’ என்ற மீன்பிடிக் கப்பல் சமீபத்தில் கடலில் மூழ்கியது. இந்த கப்பலில் 39 மீனவர்கள் இருந்தனர். இந்த கப்பலை தேடும் பணியில் சீனா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் சீனாவுக்கு உதவ, மனிதாபிமான அடிப்படையில் நம் கடற்படை முன்வந்துள்ளது. இதற்காக நம் கடற்படைக்கு சொந்தமான, ‘பி81’ என்ற ரோந்து விமானம் நேற்று முன்தினம் முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டது. மிக மோசமான வானிலையிலும், மூழ்கிய கப்பலின் சில பாகங்களை ரோந்து விமானம் கண்டுபிடித்து தகவல் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here