27 முறை எவரெஸ்டில் ஏறி சாதனை

0
199

நேபாளத்தை சேர்ந்த மலையேற்ற வீரர் 27 முறை எவரெஸ்ட் சிகரம் அடைந்து முந்தைய வீரரின் சாதனையை சமன் செய்துள்ளார். நேபாள நாட்டின் மலையேற்ற வீரரான கமி ரீட்டா ஷெர்பா(53) என்பவர் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரம் ஏறி வருகிறார். கடந்த 17ம் தேதி 27வது முறையாக 8,848.86 மீட்டர் உயர சிகரத்தில் ஏறி இவர் உலக சாதனை படைத்தார். இந்நிலையில் இவரது போட்டியாளரான நேபாளத்தை சேர்ந்த மலையேற்ற வீரர் பசாங் தவா ஷெர்பா(46) என்பவரும் 27வது முறையாக நேற்று எவரெஸ்டில் ஏறி கமி ரீட்டாவின் சாதனையை சமன் செய்தார். நேபாளத்தின் பங்போச்சே என்ற இடத்தில் பிறந்த பசாங் தவா கடந்த 1998ம் ஆண்டு முதல் எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது 27வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த இரண்டாவது நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கிடையே, ‘‘28வது முறையாக எவரெஸ்ட் ஏறுவதற்கு தயாராக உள்ளதாகவும், அதற்கான தகுந்த சூழ்நிலைக்கு காத்திருக்கிறேன்’’ என கமி ரீட்டா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here