பசிபிக் தீவு நாடுகளுக்கு எண்மத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தியா துணை நிற்கும் என பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா். பசிபிக் தீவு நாடுகளின் நம்பிக்கைக்குரிய நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்வதாகவும், அந்த நாடுகளின் தேவைகளுக்கு இந்தியா மதிப்பளிப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா். இந்தியா மற்றும் 14 பசிபிக் தீவு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மூன்றாவது உச்சி மாநாடு, பப்புவா நியூ கினியாவின் போா்ட் மோா்ஸ்பி நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.