புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு கலனை கடலில் இறக்கிய இந்தியா

0
226

இந்திய கடற்படை ஆழம் குறைந்த பகுதிகளில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு கலனை கடலில் இறக்கியுள்ளது, இதற்கான நிகழ்ச்சி கொல்கத்தாவில் உள்ள GRSE – Garden Reach Shipbuilders & Engineers கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்றது. மொத்தமாக இத்தகைய 8 ASWSWC – Anti Submarine Warfare Shallow Water Craft கலன்கள் கட்டப்பட உள்ளன, அவற்றில் இந்த கலன் இரண்டாவதாகும், இனி இந்த கலனில் சென்சார்கள், ரேடார், சோனார், ஆயுத அமைப்புகளை பொருத்தும் பணிகள் நடைபெறும் எனவும் அடுத்த ஆண்டு படையில் இணையும் எனவும் கூறப்படுகிறது.லட்சத்தீவில் உள்ள ஆண்ட்ரோத் எனும் தீவின் பெயர் தான் INS ANDROTH என இந்த கலனுக்கு சூட்டப்பட்டுள்ளது, இந்த கலனை கடலில் இறக்கியவர் மேற்கு பிராந்திய கடற்படை தளபதி கே திரிபாதியின் மனைவி திருமதி சஷி திரிபாதி ஆவார், நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லால் மற்றும் கப்பல் கட்டுமான தளத்தின் மேலாண் இயக்குனர், கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்மூக் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த வகை கலன்கள் 77 மீட்டர் நீளமும், 10.5 மீட்டர் அகலமும் கொண்டவை ஆகும், மூன்று டீசல் சக்தியால் இயங்கும் வாட்டர் ஜெட் என்ஜின்கள் உள்ளன, அதிகபட்சமாக 25 நாட் வேகத்தில் பயணிக்கும் எனவும், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள், 30mm கனரக துப்பாக்கி, 16.7mm இயந்திர துப்பாக்கி ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here