தேசிய பயிற்சித் திருவிழா

0
582

ஸ்கில் இந்தியா அமைப்பு, நாடு முழுவதும் உள்ள 660க்கும் மேற்பட்ட இடங்களில் ‘தேசிய பயிற்சி திருவிழா 2021’ஐ நடத்தியது. இத்திருவிழாவை பயிற்சித் தலைமை இயக்குநரகம் மற்றும் தேசிய திறன் வளர்ச்சி கழகம் ஆகியவற்றின் ஆதரவோடு ஸ்கில் இந்தியா நடத்தியது. மின்சாரம், சில்லரை வர்த்தகம், தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மின்னணு, வாகன தயாரிப்பு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. 5 முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளவர்கள், திறன் பயிற்சி சான்றிதழ் பெற்றுள்ளவர்கள், ஐ.டி.ஐ மாணவர்கள், பட்டயப் படிப்பு முடித்தவர்கள், பட்டதாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவில் ஸ்கில் இந்தியாவில் பயிற்சி பெற்ற 51,991 பயிற்சியாளர்களுக்கு பணி ஆணை கிடைத்தது. இத்திருவிழாவிற்கு இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது, தொழில் சந்தைக்கு தேவைப்படும் திறன்களை பாரத இளைஞர்களுக்கு வழங்கும் நமது உறுதியை இது வெளிப்படுத்தியது. தொழில் பயிற்சியில் நாடு முழுவதும் அதிக பங்கேற்பை ஊக்கப்படுத்துவதற்காக பயிற்சி விதிகளில் சில சீர்திருத்தங்களை மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது’ என்று இந்த அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here