பாரதத்தின் சிந்தனைகளை நிலை நிறுத்த வேண்டும்.

0
291

நிம்பாராம்.

ஜெய்பூர் மே 21

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் க்ஷேத்ர பிரச்சாரக் நிம்பாராம் சங்க சிக்ஷா வர்கா துவக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சங்க வேலைகளில் வர்காவுக்கு சிறப்பிடம் உண்டு. வர்கா மூலமாக சமுதாய வாழ்வின் அனுபவம் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் திறன் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் குணங்கள் ஆகியவை வளர்ச்சி அடையும் என கூறினார். அவர் மேலும் கூறுகையில் சங்கம் முழு ஹிந்து சமுதாயத்தின் அமைப்பாகும் இந்து சமுதாயம் முழுவதும் ஒன்று என்ற எண்ணத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலையை நாம் செய்ய வேண்டும், இதற்கு கருத்துக்களில் மட்டும் மாற்றம் அடைவது மட்டுமின்றி செயல்களிலும் மாற்றம் அடைய வேண்டும் என்றார் ஷாகா வேலை என்பது தேசத்தின் முன்னேற்றத்திற்காக நல்ல தகுதி வாய்ந்த நபர்களை தயார் செய்யும் இச்செயலுக்கு வ்யக்தி நிர்மாண் என்று கூறுகிறோம்.
ராஜஸ்தானில் இரண்டாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்க துவங்கியது. ஆர். எஸ். எஸ்.
ராஜஸ்தான் மாநிலத்தின் சங்க சிக்ஷா வர்க இரண்டாம் வருடம் (பொது) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது ஆதர்ஷ் வித்யா மந்திர் ஹின்டவுன் பள்ளி வளாகத்தில் துவங்கிய வர்வில் சர்வாதிகாரி ப்யாரேலால்மீணா மற்றும் நிம்பாராம் ஆகியோர்கள் பாரத மாதாவின் படத்திற்கு முன் விளக்கு ஏற்றினர்.
சமுதாயத்தில் நல்ல சக்திகளோடு சங்கம் கைகோர்த்துச் செல்லும்
துவக்க


நூற்றாண்டு
விழாவில் உரையாற்றிய நிம்பாராம் அவர்கள் விழாவின்போது சமுதாயத்தின் நல்ல சக்திகளோடு சேர்ந்து சமுதாயத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களை நாம் செய்ய வேண்டும். 2025 ஆம் ஆண்டு சங்கத்தின் நூறாவது ஆண்டு விழா வருகிறது. நாம் பாரதத்தின் தத்துவ சிந்தனைகளை உருவாக்க வேண்டும். நான்” “நாம்” “என்னுடையது” என்றவற்றுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும் ஷாகா மற்றும் மிலன் ஏற்படுத்த வேண்டும். வர்காவில் ஒவ்வொரு விஷயங்களை கேட்டும் புரிந்தும் புதிய காரிய கர்த்தர்கள் தங்களுடைய செயலிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்து நிற்பார்கள்.
இதற்காக சங்க சிக்ஷா

 

வர்காவின் சூழ்நிலை சுற்றுச்சூழலில் நன்மை ஏற்படுத்துவது
வர்க கார்யவாஹ் கேந்தாலால் சைனி கூறும் பொழுது வர்காவில் வந்துள்ள சிக்ஷார்த்திகள் நீர் பாதுகாப்பு மற்றும் மரங்கள் பாதுகாப்பு ஆகியவைவற்றில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். தினசரி வாழ்க்கையில் நீரின் உபயோகத்தை பற்றி நவீன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று நீரை குறைவாக பயன்படுத்துவது பற்றி வீடியோ காண்பிக்கப்பட்டது. நீரை பாதுகாப்பதற்காக சிக்ஷார்த்திகள் மண்ணினால் ஆன பாத்திரங்கள் உபயோகப்படுத்தினர். மரங்கள் பாதுகாப்பு மற்றும் மரங்கள் வளர்ப்பு ஆகிய எண்ணங்கள் ஏற்படுத்தப்பட்டன. நெகிழிகள் இல்லாத தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்கவும், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளிலிருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செங்கல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஸர்ஸங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்ஜி வர்காவில் வருகை தருவார்
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 253 சித்தார்த்திகள் பங்கெடுத்துக் கொண்டதாக சர்வாதிகாரி ப்யாரேலால்மீணா தெரிவித்தார். அவர்களுக்கு 31 சிக்ஷாக்கள் பயிற்சி அளித்து கொண்டிருக்கின்றனர். 20 பிரபந்தக் விவஸ்தா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். எல்லா சிக்ஷார்த்திகளம் தங்களுடைய செலவில் தான் வர்காவில் கலந்து கொண்டுள்ளனர். வர்காவில் நிர்ணயிக்கப்பட்ட முகாம் கட்டணத்தை செலுத்தி வர்காவில் பயிற்சி பெற்றுக் கொள்கின்றனர். 20 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் கடைசி வாரம் ஸர்ஸங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்ஜி இரண்டாம் ஆண்டு முகாமுக்கு வருகை தர உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here