மைசூர் வாசுதேவாச்சாரியார்

0
109

மே 28, 1865 ஆம் ஆண்டு வாசுதேவாச்சாரியார், சுப்பிரமணியாச்சாரியாரின் மகனாக கோயம்புத்தூர் “செவ்வூர்” எனும் கிராமத்தில் பிறந்தார். சமஸ்கிருதம் கற்றார். பட்டினம் சுப்பிரமணி ஐயரின் சிஷ்யராக இருந்து ஒரு சிறந்த சங்கீத வித்துவானாகவும், வாக்கேயகாரராகவும் விளங்கினார். இறுதிக் காலத்தை அடையாரில் உள்ள கலாகக்ஷேத்ராவில் கழித்தார். இந்த ஸ்தாபனத்தின் உபதலைவராக இருந்து “சீதா கல்யாணம்” என்ற நாட்டிய நாடகத்திற்கு இசையமைத்தார். கவிஞர்கள் வாழ்க்கை வரலாறு, கீர்த்தனைகள், இராகமாலிகைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளில் அனேக கீர்த்தனங்களைச் செய்து அச்சிட்டு பிரசித்தப்படுத்தினார். 60 ஆண்டு காலமாக தென்னாட்டிலே இவரின் இசை பிரகாசித்ததுடன் பல அரசர்களாலும், மடாதிபதிகளாலும் போற்றப்பட்டார். பலர் இவரிடம் சிஷ்யராக சேர்ந்து இசை பயின்றனர். இவரது முத்திரை “வாசுதேவ”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here