நமது பாரத தேச வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு, பாரத தேசத்தின் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டுள்ளது, இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் ஆன்மிகத்தையும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் பறைசாற்றும் போற்றுதலுக்குரிய ஆதினங்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் நேர்மையான ஆட்சியின் அடையாளமான, சைவ சின்னங்கள் பொறித்த செங்கோலை வழங்கினர். ரா
ஜாஜி அவர்களின் முயற்சியின் பேரில் இந்த செங்கோல், 1947 ஆகஸ்ட் 14 இரவு திருவாடுதுறை ஆதீனத்தின் கட்டளை தம்பிரான் சடைச்சாமி என்று அழைக்கப்பட்ட திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் நேருவிடம் வழங்கினார்.
அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து பின்பு புனித நீர் தெளிக்கப்பட்டு தேவார திருப்பதிகம் பாடி ஆட்சி மாற்றத்தின் நிகழ்வாக இது நடைபெற்றது.
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வு இது. இதில் சில கட்சிகள் அரசியல் செய்வது தேவையற்றது. தமிழகத்தின் போற்றுதலுக்குரிய அனைத்து ஆதினங்களிடம் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தேவாரம், கோளாறு பதிகம் பாடி, மங்கள நீர் தெளித்து பெற்றுக்கொண்டார்.
இது நமது பாரத தேசத்தின் கலாச்சாரம், சமயம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்றது. இந்நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் மற்றும் பிரிவினைவாத சாயம் சாற்றி பார்ப்பது கண்டனத்துக்குரியது.
இது தமிழ் மற்றும் பாரத கலாச்சாரத்தின் உயர்வை காட்டுவதாகும். பாரத கலாச்சாரத்தை நிலை நாட்டிய இந்நிகழ்வை, விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளது என்று கூறியுள்ளார்.