இந்தியா சீனா இடையிலான அசல் எல்லைக் கோடு பிரச்சினைக்குத் தீர்வு – சீன அதிகாரிகள் ஒப்புதல்

0
988

இந்தியா சீனா ராணுவத் தளபதிகள் மட்டத்திலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை விவகாரங்கள் தொடர்பான இருதரப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா சீனா இடையிலான அசல் எல்லைக் கோடு பிரச்சினைக்குத் தீர்வு காண விரைவில் ராணுவத்தளபதிகள் பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்த மனத்துடன் பிரச்சினைகளை அணுக சீன அதிகாரிகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here