மணிப்பூர் கலவரம் விசாரிக்க கமிஷன்:மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

0
291

மணிப்பூர் கலவரம் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்டவர்களை தப்ப விட மாட்டோம். கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும். கலவரம் தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கும். கவர்னர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய அமைதிக் குழு ஒன்று அமைக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணம் வழங்கப்படும். ரேசன் பொருட்கள் வழங்க சிறப்பு முகாம்கள் அமைப்போம். பள்ளிகள் திறக்கப்படும் வரை ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சொத்துகளை இழந்தோர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நாளை நிவாரணம் அறிவிக்கப்படும். மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here