ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக ‘அவ்வையார் அன்பு இல்லம்’

0
635

திருப்பூர், ஜூன் 5- ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக, திருப்பூரில் அவ்வையார் அன்பு இல்லம் துவங்கப்பட்டது. சேவாபாரதி சார்பில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக பலவஞ்சிபாளையம், தச்சன் தோட்டத்தில் ‘அவ்வையார் அன்பு இல்லம்’ நேற்று துவங்கப்பட்டது. இதன் துவக்க விழா, விவேகானந்தா வித்யாலயாவில் நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். சேவாபாரதி மாநில தலைவர் வடிவேல் முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ராமசாமி வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மேகாலயா கவர்னர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று காப்பகத்தை திறந்து வைத்தார். மேலும், கோடைக்கால பண்பாட்டு பயிற்சி நிறைவு விழா நடந்தது. அதில், சேவா பாரதி மாநில தலைவர் வடிவேல் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் விஜயகுமார், உப தலைவர் மோகன்குமார், செயலாளர் ஸ்டாலின் கிருஷ்ணா, ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, முகாமில் பங்கேற்ற குழந்தைகள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here