எல்லைப் பகுதிகளில் புதிய திட்டங்கள்

0
93

சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உட்பட எல்லையோர மாநிலங்களில் ரூ.724 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 28 திட்டங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார். அதில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் அலோங் யின் கியோங் சாலையில் புதிதாக கட்டப்பட்ட சியோம் பாலத்தை துவக்கிவைத்து அவர் பேசுகையில், ” தேசத்தில் எல்லை பாதுகாப்புக்காக எல்லைகளில் முகாமிட்டிருக்கும் நமது பாதுகாப்புப் படையினரின் வசதிக்காக சாலை, பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பாரதம் ஒருபோதும் போரை விரும்பியது இல்லை. நாங்கள் ராமர், புத்தரின் போதனைகளின்படி அமைதியை விரும்புகிறோம். இது போருக்கான காலம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் யாராவது பாரதத்தின் மீது போரை திணித்தால் அதனை நாங்கள் தீரமுடன் எதிர்கொள்வோம். அனைத்துவிதமான அச்சுறுத்தல்களில் இருந்தும் நாட்டை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எல்லையில் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன. எதிர்கால சவால்களை சமாளிக்க வலுவான, தன்னம்பிக்கையான புதிய பாரதத்தை உருவாக்கும் லட்சியத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” என கூறினார். அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்த 28 திட்டங்களில் 8 திட்டங்கள் லடாக்கில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் 5, காஷ்மீரில் 4, சிக்கிம், உத்தராகண்ட், பஞ்சாபில் தலா 3, ராஜஸ்தானில் 2 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here