ராமர் கோயில் கட்டுமான முன்னேற்றம்

0
89

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை அமைப்பு, அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க நேற்று ஒரு முக்கியக் கூட்டத்தை நடத்தியது. ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய், பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகராஜ், உறுப்பினர் டாக்டர் அனில் மிஸ்ரா, எல்&டி மற்றும் டாடா கன்சல்டன்சி நிறுவனங்களின் பொறியாளர்கள், ரிசா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்று பெரிய சிலை நிபுணர்கள், வல்லுனர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். சர்க்யூட் ஹவுசில் நடந்த இந்த கூட்டத்துக்கு, கட்டட கட்டுமான குழு தலைவர் நிபேந்திர மிஸ்ரா தலைமை வகித்தார். கூட்டத்தில், ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலின் கருவறையில் அமைக்கப்படவுள்ள ஸ்ரீராமர் (ராம் லல்லா) சிலையின் வடிவம், சிலையின் நீளம், அகலம், உயரம், பயன்படுத்தப்பட வேண்டிய கற்கள், ராமரின் முக வடிவம் போன்ற பல அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயில் கட்டுமானக் குழுவின் மூன்று நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் இது குறித்து ஒரு குழு அமைக்கப்படும்,” என்று கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here