காஷ்மீரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீசாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (5ம் தேதி) நடைபெற்றது. சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானம் காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேக பூஜைகளை நடத்தி வைத்தார். முன்னதாக பிரதிஷ்டை செய்யப்படும் ஸ்ரீசாரதாம்பாள் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு வழிபாடு இல்லாமல் சிதிலமடைந்த ஸ்ரீசாரதா கோயில், தற்போது இந்திய எல்லைக்குள் புண்ணிய பூமியில் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் மீண்டும் காஷ்மீர் ஸ்ரீசாரதாதேவியை வழிபடும் பாக்கியம் கிடைக்கும்.