பழங்குடி மக்கள் உரிமைக்காக போராடிய மாவீரன் பிர்சா முண்டா

0
128

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பீஹார் மாநிலத்தில் மலைவாழ் மக்களின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட செயல்வீரன் பிர்ஸா முண்டா. அராஜக ஜமீன்தார்கள், ஆக்கிரமிப்பு வெள்ளைக்கார கிறிஸ்தவ அரசாங்கம், செல்வாக்குள்ள வஞ்சகப் பாதிரியார்கள், நேர்மையற்ற போலீசார் இவர்களிடமிருந்து கபடமற்ற மலைவாழ் மக்களைக் காத்தவர் வீரன் பிர்ஸா ‘பகவான்’. 1871 இல் பிரிட்டிஷ் அரசால் அமுலாக்கப்பட்ட ’குற்றப் பரம்பரை சட்டம்’ என்ற கொடுமையான இனவாத சட்டம் முழுக்க முழுக்க கிறிஸ்தவ மதமாற்றத்தின் தாக்கம் கொண்டது. அதாவது பிறப்பின் அடிப்படையில்தான் ஒருவர் உயர்ந்தவராகவோ, தாழ்ந்தவராகவோ இருக்க முடியும் என்பதுதான் அதன் அடிப்படை. யாராவது ஒருவர் செய்த தவறுக்கு அவரது பரம்பரை பரம்பரையாக பாவச் சுமையாக வரும் எனும் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளின் நடைமுறை. இதன் விளைவாகவே இந்தியாவிலும் குற்றப் பரம்பரையினர் என வனவாசி சமுதாயம் மற்றும் நாடோடி சமுதாயங்களைச் சார்ந்தவர்களை முத்திரை குத்தினர், வெள்ளை கிறிஸ்தவ அரசாங்கம். இதனை வனவாசி சமுதாய சான்றோர்கள் எதிர்த்தனர். அவர்களில் முக்கியமானவர் சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒரிஸ்ஸா உள்ளிட்ட பாரதத்தின் மத்திய மற்றும் கிழக்கு வனவாசிப் பிரதேசங்கள் முழுவதும் இன்றும் அவதார புருஷராக வணங்கப்படும் பகவான் பிர்ஸா முண்டா. இவர் வனவாசிகளை சுரண்டும் வியாபாரிகள், பிரிட்டிஷ் ஆதிக்க வாதிகள் மற்றும் மதமாற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு மத போதகர்கள் ஆகியவர்களை இராவணன் என வர்ணித்து போர் புரிந்தார். வனவாசிகளை பூணூல் அணிய செய்து சாதியத்தை அழித்தவர் பிர்ஸா பகவான். இவரது மறைவுக்குப் பின்னர் இன்றைக்கும் இவர் வனவாசிகளின் விடுதலையின் ஒளி விளக்காக திகழ்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here