பாகிஸ்தானில் இந்து சிறுமி துப்பாக்கி முனையில் மதமாற்றம்

0
138

கராச்சி, பாகிஸ்தான் நாட்டின் சிந்த் மாகாணத்தில் வசித்து வருபவர் திலீப் குமார். இவரது மகள் சுஹானா (வயது 14). அக்தர் கபோல், பைசான் ஜாட் மற்றும் சாரங் கஸ்கேலி ஆகிய 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து, தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு, அவரது மகள் சுஹானாவை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று கட்டாய மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக வசித்து வரும் இந்துக்கள், உள்ளிட்டோரை கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து, திருமணம் செய்து கொள்ளும் கலாசாரம் அதிகரித்து காணப்படுகிறது. இதுபோன்ற அத்துமீறலில், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என வயது வேற்றுமையின்றி ஈடுபட்டபோதும், அந்நாட்டு சட்டங்களும் அவர்களுக்கு துணை போவது போன்றே காணப்படுகின்றன. சட்ட திருத்தம் கொண்டு வர அரசு முயன்றாலும் மதகுருமார்கள் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட திருத்தம் நிறைவேற விடாமல் தடை போட்டு விடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here