8 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

0
3293

ஸ்குவாஷ் போட்டியின் தொடக்க விழா மட்டும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நேற்று மாலை நடந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியின் முதல் சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது.லீக் ஆட்டங்களில் ஜப்பான்-தென்ஆப்பிரிக்கா (காலை 10.30 மணி), எகிப்து-ஆஸ்திரேலியா (பகல் 1 மணி), மலேசியா-கொலம்பியா (மாலை 3.30 மணி), இந்தியா-ஹாங்காங் (மாலை 6 மணி) மோதுகின்றன. ஒவ்வொரு அணியிலும் 2 வீரர், 2 வீராங்கனைகள் இடம் பெறுவார்கள். ஒவ்வொரு போட்டியும் 4 ஆட்டங்கள் கொண்டதாகும். இந்திய அணி தனது எஞ்சிய லீக் ஆட்டங்களில் நாளை தென்ஆப்பிரிக்காவையும் (மாலை 6 மணி), நாளை மறுநாள் ஜப்பானையும் (மாலை 6 மணி) எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here