காஷ்மீர் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல்

0
78

பாரதத்தில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்திவரும் பாகிஸ்தானை சேர்ந்த செயல்படும் லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் பினாமி அமைப்பாக ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட்’ (டி.ஆர்.எப்) என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரரான ஹேமு கலாணியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், “அகண்ட பாரதம் என்பது உண்மை, பிளவுபட்டிருக்கும் பாரதம் ஒரு கொடுமையான கனவு. கடந்த 1947க்கு முன்பு ஒரு பாரதம் இருந்தது. தங்களின் பிடிவாதத்தால் பாரதத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அங்கு இப்போதும் வலிகள் உள்ளன. பாரதத்தில் இருந்து பிரிந்தது தவறு என்று பாகிஸ்தான் மக்கள் அனைவரும் கூறுகிறார்கள்” என பேசியிருந்தார். அவர் இப்படி பேசிய 3 நாட்களில் டி.ஆர்.எப் பயங்கரவாத அமைப்பு இந்த மிரட்டலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. “ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய முஸ்லிம் தலைவர்களை டி.ஆர்.எப் அச்சுறுத்தியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என மத்திய அரசின்மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here