சரியான தகவல்களை வழங்குவது ஊடகங்களின் கடமை

0
127
**EDS: IMAGE VIA PIB** Goa: Union Minister for Information & Broadcasting, Youth Affairs & Sports Anurag Singh Thakur addresses during the opening ceremony of 53rd International Film Festival of India (IFFI), in Goa, Sunday, Nov. 20, 2022. (PTI Photo)(PTI11_20_2022_000275B)

ஆசிய பசிபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய பொது சபை கூட்டத்தில்க்லந்துகொண்டு பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், “நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும். பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய செய்திகளை லைவாக வெளியிடும்போது, அது தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான தடயங்களை அளிப்பதாகவோ அவர்களின் தவறான நோக்கங்களுக்கு இடம் அளித்து விடுவதாகவோ அமைந்துவிடக்கூடாது என்பது உறுதி செய்து கொள்ளப்பட வேண்டும். உலகம் முழுவதும் கொரோனா நெருக்கடியானது, நாம் அனைவருக்கும் சோதனையான காலகட்டம் ஆக இருந்தது. பொதுமுடக்கத்தின்போது, வெளியுலகுடன் மக்களை இணைக்கும் பணியை ஊடகங்கள் செய்தன. அதுபோன்ற தருணங்களில் சரியான மற்றும் தக்க தருணத்தில் தகவல்களை வழங்குவது என்பதும் ஊடகங்களின் கடமையாகும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here