சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகி

0
58

1. சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகி நவம்பர் 30, 1904 ல், கேரளாவில் உள்ள எல்லப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆனால் அது நாளடைவில் “சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகியார்” என்றானது.
2. தமிழறிஞர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். திரைப்பட பாடலாசிரியர், பாடகர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
3. சொல்வளமும், பொருட்செறிவும் நிறைந்த கவிதைகள், சிறுகாப்பியங்கள் எழுதியுள்ளார்.
4. இவரது ஆக்கங்கள் மணிக்கொடி, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் வந்து, தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது.
5. சென்னையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
6. தனது சிறை அனுபவங்களை, “சிறைச்சாலை ஓர் தவச்சாலை, நமது சுதந்திர தேவியின் கோயில் வாயில்! ஆகவே, சிறைச்சாலையை நான் வணங்குகிறேன், போற்றுகிறேன்” என, “எனது சிறைவாசம்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here