பதக்கம் பெற உதவிய பகவத் கீதை

0
1029

டோக்கியோவி நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றவர் சரத்குமார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பாராலிம்பிக்ஸ் டி 42 உயரம் தாண்டுதலில் பங்கேற்பதற்கு முந்தைய நாள் இரவு எனக்கு ஏற்பட்ட முழங்கால் பிரச்சனையால் மனச்சோர்வடைந்து இருந்தேன். உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வில் இருந்து வெளியேறும் எண்ணமும் வந்தது. என் நிலையை நினைத்து அழுதேன். பிறகு என் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது என் தந்தை, ‘பகவத் கீதையைப் படி, உன் கட்டுப்பாட்டில் உள்ளவற்றின் மீது மட்டும் கவனம் செலுத்து, உன்னால் கட்டுப்படுத்த முடியாதவற்றை மறந்துவிடு’ என்று கூறினார். மறுநாள் போட்டியின்போது நல்ல மழை, நடுவர்கள் போட்டியை தள்ளிவைக்க ஒப்புக்கொள்ளவில்லை. இந்த கடின சூழலில், உயரம் தாண்டுதல், எனது முழங்கால்களைப் பாதுகாத்தல் என இரண்டு வேலைகளை நான் செய்ய வேண்டி இருந்தது. எனினும் அப்போட்டியில் நான் பதக்கம் வென்றதற்கு என் குடும்பத்தினர் ஆதரவும் பகவத் கீதையுமே காரணம் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here