சர்வதேச யோகா தினத்தன்று அலுவலகத்தில் யோகா பயிற்சி ; மத்திய அரசு புது அறிவிப்பு

0
109

அலுவலகப் பணிக்கு இடையே, யோகா பயிற்சி செய்வதற்கான இடைவேளை அறிமுகப்படுத்தப்படுவதாக, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் சர்வதேச யோகா தினம், 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஆயுஷ் அமைச்சகம் புதிய நடைமுறையை பரிந்துரைத்துள்ளது.
அலுவலக மற்றும் குடும்ப காரணங்களால் யோகா பயிற்சி செய்ய முடியாதவர்கள், அலுவலகத்திலேயே பயிற்சி செய்யலாம். இதற்காக, தேநீர் இடைவேளை எடுப்பதுபோல், யோகா இடைவேளை தரப்படும். மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தங்களுடைய நாற்காலியில் இருந்தபடியே சுலபமான யோகா பயிற்சிகளை செய்ய முடியும். மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இணைந்து இதற்கான பயிற்சி வழிமுறைகளை வகுத்துள்ளன. சுலபமான ஆசனங்கள், பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி, தியானம் அடங்கியதாக இது இருக்கும். இந்த யோகா இடைவேளை தொடர்பாக அனைத்து அமைச்சகங்கள், துறைகள், ஊழியர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here