காஜியாபாத்-உத்தர பிரதேசத்தில், சிறுவர்களை குறிவைத்து, ‘ஆன்லைன்’ விளையாட்டு செயலி வாயிலாக மத மாற்ற மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவருக்கு, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.ஆன்லைன் விளையாட்டு செயலி வாயிலாக சிறுவர்களை குறிவைத்து, மத மாற்ற மோசடி நடப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்த போலீசார், காஜியாபாத் நகரில் சஞ்சய் நகர் என்ற பகுதியில் உள்ள மசூதியின் மவுலவி அப்துல் ரகுமான் என்பவரை கைது செய்தனர்.இவரிடம் நடத்திய விசாரணையில், சிறுவர்களை குறிவைத்து ஒரு கும்பல் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.ஷா நவாஸ் கானிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில், பாகிஸ்தானில் வசிக்கும், 30 பேரின் மொபைல் எண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத மாற்ற மோசடி தொடர்பாக, பாக்.,கில் உள்ளவர்களுடன் ஷா நவாஸ் கான் தொடர்பில் இருந்துள்ளார்.,ஆறு இ – மெயில் முகவரியையும் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் ஒன்று, பாகிஸ்தான் தொடர்புடையது. அவரிடம், உ.பி., போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.