சர்வதேச யோகா தினத்தையொட்டி, கோவையில், ஈஷா யோகா மையம் சார்பில், பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஈஷா யோகா மையம் சார்பில், கோவை விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியை, விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் துவக்கி வைத்தார். ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன் நடந்த நிகழ்ச்சியில், சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் பங்கேற்றனர். இதேபோல், ஐ.என்.எஸ்., அக்ரானி, விமானப்படை கல்லுாரி, வெள்ளலுாரில் உள்ள சிறப்பு அதிரடி படை வளாகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகாசனம் கற்றுக்கொடுக்கப்பட்டது.