காலத்தால் அழிக்கமுடியாத பல பாடல்களுக்கு இசை அமைத்த எம்.எஸ். விஸ்வநாதன் இசை உலகின் இமயமாக போற்றப்படுபவர். இவரது சொந்த ஊர் பாலக்காடு. பெற்றோர் சுப்பிரமணி நாயர். -நாராயணி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இசை அமுதை அள்ளிஅள்ளி வாரி வழங்கினார். எழுதிக் கொடுத்த பாடல், பல்லவி, சரணங்களுக்கு இருபது நிமிடத்தில் மெட்டுப் போட்டு விடுவார் எம்.எஸ்.விஸ்வநாதன். எங்கிருந்துதான் அவருக்கு மெட்டு வருமோ? ஒரே வியப்பாக இருக்கும். ஆர்மோனியப் பெட்டியை வாசிக்க ஆரம்பித்து விட்டால் டீ, காபி, சாப்பாடு அனைத்தையும் மறந்து விடுவார். கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்து 1960-ல் இருந்து 1980 வரை அற்புதமான பொற்காலப் பாடல்களை தந்திருக்கிறார்கள்.அறுபது ஆண்டுகளாக எம்.எஸ்.வி.யின் மெல்லிசை பாடல்கள் பஞ்சப்பூதங்களிலும், நமது ஐம்புலன்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.இசை உலகின் இமயமான எம்.எஸ்.விஸ்வநாதன் 950 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளார்.
#சான்றோர்தினம்