உலக சுற்றுச்சூழல் தினத்தில் அகில பாரத தலைவர் மரம் நட்டார் ஹின்டோன்:.

0
56

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத்ஜி தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் போது சங்க சிக்ஷா வர்க இரண்டாம் ஆண்டு முகாமில் சனிக்கிழமை வந்தடைந்தார். ஞாயிறன்று காலை உலக சுற்றுச்சூழல் தினத்தில் டாக்டர் மோகன் பாகவத்ஜி பள்ளி கமிட்டியுடன் சேர்ந்து சிசுவடிகா வளாகத்தில் ஸப்போட்டா மற்றும் நெல்லி மரக்கன்றுகள் நட்டார். பூஜ்ய ஸர்ஸங்க சாலக்ஜி அந்த செடிகளை மந்திரோச்சாரணத்துடன் பூமியில் நட்டார். ஷேத்திர பிரச்சாரக் நிம்பாராம்ஜி பலாமரகன்றும் ஷேத்திர ஸேவா ப்ரமுக் சிவலகரிஜி வெற்றிலையும், ப்ராந்த பிரச்சாரக் பாபுலால் மாமரகன்றும் நட்டார். சிசுவாடிக்காவில் கனி கொடுக்கும் ஐந்து மரங்களின் பஞ்சடி ஏற்படுத்தப்பட்டது. ஆதர்ஷ வித்யா மந்திர் கமிட்டி இந்த செடிகளை மரமாக வளர்வது வரை பாதுகாக்க வேண்டும் என சங்கல்பம் எடுத்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here