ராஷ்ட்ரீய ஸ்வயம் சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக திரு டி எஸ் வைகுண்டம் அவர்கள் எழுதிய பாஸ்கர ராவ் – சங்கம் என்னும் நந்தவனத்தில் பூத்த குறிஞ்சி மலர் என்ற புத்தகம் 29 .6 .2023 அன்று மாலை நாகர்கோவிலில் வெளியிடப்பட்டது.விழாவிற்கு வெள்ளிமலை ஆசிரமத்தின் ஏக தர்மகர்த்தா சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். அவர் ஆசியுரை வழங்கிப் பேசும் பொழுது சமுதாய பணிக்காக நமது வீடுகளில் இருந்து குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் கன்னியாகுமாரி விபாக் சங்கச்சாலக் மானனீய ஏ காமராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். நூலாசிரியர் திரு டி எஸ் வைகுண்டம் அவர்கள் பேசும் பொழுது இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாஸ்கரராவ் அவர்கள் ஆற்றிய பணியும், ஆளுமை தன்மையும், பன்முகத்தன்மையும், அளிக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த புத்தகத்தில் அவரைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை படிக்கும் பொழுது நமக்கு மேலும் சங்க வேலைசெய்ய வேண்டிய ஆர்வம் ஏற்படும் என்று குறிப்பிட்டார் .நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய பா ஜ க மாநில அமைப்பு செயலாளர் திரு கேசவ நாயகம் அவர்கள் பாஸ்கரராவ் அவர்களுடன் தான் வாழ்ந்த காலங்களின் நினைவுகளையும் நாம் ஒவ்வொருவரும் அவருடைய ஆசிர்வாதத்தால் அதிகமாக சமுதாயப் பணி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் திரு குமாரசுவாமி, முன்னாள் எம்எல்ஏ திரு வேலாயுதம், மதுரையைச் சார்ந்த திரு கணேஷ் பாபு ஆகியோர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கு விபாக் பிரசாரக், சஹ விபாக் பிரசாரக் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் பாஜக பொறுப்பாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர். இறுதியில் சங்க பிரார்த்தனையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.