டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் அதிகாலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பிரதமர் வீட்டின் மேல் பகுதியில் ட்ரோன் பறப்பதாக பாதுகாப்பு படையினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அங்கு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கிடைத்த தகவலின்படி, இன்று (ஜூலை 3) அதிகாலை 5 மணியளவில், பிரதமர் மாளிகைக்கு மேலே ஏதோ பறப்பதைப் பார்த்து ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் காவல்துறையினருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
அறிக்கை வெளியிட்ட டெல்லி காவல்துறை:
அறிக்கையில், “”புது தில்லி மாவட்டத்தின் (NDD) கட்டுப்பாட்டு அறைக்கு, பிரதமர் இல்லம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தது. ட்ரோனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை ட்ரோன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.