டெல்லியில் மாநில உணவுத்துறை மந்திரிகள் மாநாடு

0
2980

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் சார்பில் தேசிய உணவுத்துறை மந்திரிகள் மாநாடு டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் அனைத்து மாநிலங்களின் உணவுத்துறை மந்திரிகள் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டில், 2023-2024-ம் ஆண்டுக்கான ‘பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. மாநாட்டுக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது வினியோகம் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் தலைமை தாங்குகிறார். ராஜாங்க மந்திரிகள் அஸ்வினிகுமார் சவுபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில மந்திரிகளுடன் துறைச் செயலாளர்களும் கலந்துகொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here