மணிப்பூரில் ராணுவ முகாமில் அத்துமீறி நுழைந்து ஆயுதங்களை திருட முயற்சி

0
149

மணிப்பூரில் ராணுவ முகாமில் அத்துமீறி நுழந்து ஆயுதங்களை திருட முயற்சி
மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் உள்ள காங்காபோக் என்ற இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஆயுதங்களை கடத்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. அப்போது பாதுகாப்பு வீரர்களுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர். ஆனால், ஆயுதம் வைத்திருந்த அந்த கும்பல் வீரர்களை நோக்கி சுடத்தொடங்கினர். இதனால் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் கொள்ளையடிக்க வந்த கும்பலில் 27 வயது நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here