புது தில்லி, ஜூலை 18 பிரதமர் நரேந்திர மோடியின் பாரிஸ் பயணத்தின் போது, நீண்ட கால வரைவு திட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய தலைமுறை ராணுவத் தளவாடங்களை உருவாக்க இந்தியாவும் பிரான்சும் ஒப்புக்கொண்டதாக பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.ஒரு ஊடக சந்திப்பில், தூதுவர் இந்த விஜயத்தை இரு நாடுகளுக்கும் இடையிலான “நம்பிக்கை மற்றும் வலுவான பங்காளித்துவத்தின்” பிரதிபலிப்பு என்று விவரித்தார்.