மணிப்பூர் சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது – குற்றவாளிகளை தப்பவிடமாட்டோம் பிரதமர் மோடி

0
221

பெரும்பான்மையினரான ‘மெய்தி’ இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்குமாறு கோரி வருகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணிகள், கலவரமாக உருவெடுத்தன. கலவரம் சற்று ஓய்ந்த நிலையில், கடந்த மே 4-ந் தேதி பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை பற்ற வைத்துள்ளது. மணிப்பூரில், ஒரு சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மற்றொரு சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்துச் செல்வதாக அந்த வீடியோ அமைந்துள்ளது. மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள், மனித இனத்துக்கே வெட்கக்கேடானவை. ஒட்டுமொத்த நாட்டுக்கும் இழுக்கு நேர்ந்துள்ளது. 140 கோடி இந்தியர்களும் வெட்கப்படுகிறார்கள்.மணிப்பூர் மகள்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here